சசிகலா வேட்பாளர் ’என்கவுண்ட்டர்’ வெள்ளைதுரை அதிமுகவில் இணைந்தார்!

By Mathi

|

Published on 1 Nov 2026, 6:59 PM

AIADMK-Vellaidurai

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி ‘என்கவுண்ட்டர்’ வெள்ளைதுரை இன்று (நவ.1) அதிமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டவரும், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் S. வெள்ளைதுரை, Addl. Superintendent of Police (Retd.,) அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

யார் இந்த ‘என்கவுண்ட்டர்’ வெள்ளைதுரை?

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளைதுரை, 1997-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். 2003-ஆம் ஆண்டு சென்னையில் அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியப் பங்காற்றினார். 2004-ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக் கொன்ற அதிரடிப்படையிலும் இடம்பெற்றிருந்தார். 10-க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர் சம்பவங்களில் தொடர்புடைய இவர், ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என அழைக்கப்பட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய வெள்ளைதுரை, 2013-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் கொக்கி குமார் என்பவர் காவலில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, 2024 மே 30-ந் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகள் தொடர்பாக ஓய்வூதியப் பலன்களில் ரூ.5 லட்சத்தை நிறுத்திவைக்கும் நிபந்தனையுடன் மே 31-ந் தேதி பணி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார்.

1,048 ஓட்டுகள்

பின்னர் சசிகலா, பொதுச்செயலாளராக இருந்த அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டசபைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்ட வெள்ளைதுரை 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார். தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு மின்னணு வாக்குப்பதிவில் 1,003 வாக்குகளும், தபால் வாக்குகளில் 45 வாக்குகளும் கிடைத்தன. இந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel