மொத்தமாக களமிறங்கும் கோலிவுட்… ஒரே நாளில் வெளியாகும் 11 திரைப்படங்கள்!

Published On:

| By Manjula

11 Tamil movies releasing in last week

வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நாளை மறுநாள் (டிசம்பர் 29) மொத்தமாக 11 திரைப்படங்கள் வெளியாகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் என பெரிய பண்டிகைகளின் போது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

சில சமயங்களில் இதுபோன்ற பெரிய படங்களுடன் சிறு படங்களும் எதிர்பாராமல் வெளியாகி, நல்ல வரவேற்பை பெறுவது உண்டு.

என்றாலும் தற்போதைய காலகட்டத்தில் பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கு தியேட்டர் ஒதுக்கீடு தொடங்கி, ப்ரோமோஷன் வரை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டு விடுகின்றன.

ADVERTISEMENT

இதனால் சிறு பட்ஜெட் படங்களின் நிலை தான் திண்டாட்டமாகி விடுகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 29-ம் தேதி மொத்தமாக 11 திரைப்படங்கள் வெளியாகின்றன.

மன்சூர் அலிகானின் சரக்கு, சோனியா அகர்வால்-பாக்யராஜ் நடிப்பில் மூன்றாம் மனிதன், சுரேஷ் ரவி நடிப்பில் நந்தி வர்மன், வட்டார வழக்கு, மதிமாறன், டிக் டாக், மூத்த குடி, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ரூட் நம்பர் 17, ஜெய் விஜயம், பேய்க்கு கல்யாணம் ஆகிய படங்கள் வெளியாகின்றன.

ADVERTISEMENT

தற்போது கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரை தொடர் விடுமுறை என்பதால் இத்தனை படங்களும் மொத்தமாக களமிறங்க உள்ளதாக தெரிகிறது.

இதில் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் எந்த படம் இடம் பெறப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

கூட்டணி : டெல்லி செல்லும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்!

எம்.பில் படிப்புகளில் சேரவேண்டாம்: யுஜிசி அறிவுறுத்தல்!

இப்பவாச்சும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா பிக்பாஸ்?… வறுக்கும் ரசிகர்கள்!

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share