எம்.பில் படிப்புகளில் சேர வேண்டாம் என்று மாணவர்களுக்கு யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து யுஜிசி இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சில பல்கலைக்கழகங்கள் எம்.பில் படிப்பிற்கு புதிதாக விண்ணப்பங்களை வரவேற்கிறது என்பது யுஜிசியின் கவனத்திற்கு வந்துள்ளது. எம்.பில் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
யுஜிசியின் ஒழுங்குமுறை எண். 14 (பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள்) விதிமுறைகள் 2022, உயர்கல்வி நிறுவனங்கள் எம்.பில் திட்டத்தை வழங்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.
இது தொடர்பாக யுஜிசி, ‘பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறைகள் 2022’-ஐ உருவாக்கியுள்ளது. இது கடந்த 2022 நவம்பர் 7 ஆம் தேதி இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
எனவே 2023-24 கல்வியாண்டுக்கான எம்.பில் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் எம்.பில் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இப்பவாச்சும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா பிக்பாஸ்?… வறுக்கும் ரசிகர்கள்!