இப்பவாச்சும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா பிக்பாஸ்?… வறுக்கும் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் நிக்ஸன் தன்னுடைய பழைய சேட்டைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். nixen deserved for red card
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நிக்ஸன் எல்லை மீறி செய்யும் செயல்கள், ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஐஷுவிடம், நிக்ஸன் எல்லை மீறி நடந்து கொண்டார். ஆனால் இதை பிக்பாஸ் எதுவும் கண்டிக்கவில்லை.
இதனால் திறமை இருந்தும் கூட ஐஷு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்படி ஆனது. அதேபோல தற்போது பூர்ணிமாவிடம் நிக்ஸன் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
https://twitter.com/uchihabb6/status/1739744224768372816
இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பூர்ணிமா படுத்திருக்க, நிக்ஸன் அவரின் முடியோடு விளையாடிக்கொண்டே பேசுகிறார்.
இருவரும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து பேசுவதையும் நிக்ஸன், பூர்ணிமாவிடம் நடந்து கொள்வதையும் பார்த்த ரசிகர்கள் இதுகுறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதில், ”பிக்பாஸ் இது அண்ணன்-தங்கச்சி உறவுன்னு சொல்லிடாதீங்க. இந்த முறையாவது நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளிய அனுப்புங்க.
அவரு இதே மாதிரி தான் ஐஷுவுக்கும் செஞ்சு அந்த பொண்ணோட விளையாட்டை கெடுத்தாரு. பூர்ணிமா பெற்றோர் இதை பார்த்தா அவங்களுக்கு எப்படி இருக்கும்?
இது ரொம்ப சீரியஸான விஷயம். தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க,” என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே ரசிகர்களின் இந்த கோரிக்கையை ஏற்று பிக்பாஸ் இந்த வாரம் நிக்ஸனை வெளியே அனுப்பி வைப்பாரா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
ஓபிஎஸ்தான் சிறைக்கு செல்வார்: ஈபிஎஸ் பேட்டி!
’ரூ.40,000 கோடி கொரோனா ஊழல்’ : எடியூரப்பாவை அம்பலப்படுத்திய பாஜக எம்எல்ஏ!
எண்ணூர் அமோனியா கசிவு: தமிழக அரசை எச்சரித்த எடப்பாடி
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ!
nixen deserved for red card