சின்ன பகவதிக்கு ஒரு பதவி : அப்டேட் குமாரு

By Kavi

|

Published on 21 Jun 2026, 1:05 AM

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

அண்ணாச்சி

ADVERTISEMENT

தமிழை பாதுகாப்பாங்க ன்னு நினைச்சா, இவங்ககிட்ட இருந்து தமிழை காப்பாற்ற வேண்டியிருக்கு 

-அமைச்சர்களின் ” வாசிப்பு “

ADVERTISEMENT

படிக்காதவன்

தங்கம் விலை ஏறுனாலும் இறங்குனாலும் 

ADVERTISEMENT

எனக்கொரு கவலையும் இல்லை’ங்கிற மாதிரிதான் இப்ப நம்ம வாழ்க்கை போயிட்டு இருக்கு..‌.

balebalu

வேண்டா வெறுப்பா பிள்ளை பெத்து காண்டாமிருகம் ன்னு பெயர் வைப்பது – பழமொழி

வேண்டா வெறுப்பா தேர்தலில் நின்னு முதலமைச்சர் ஆவது – புதுமொழி

அண்ணாச்சி

ஆஸ்தான கேமராமேனுக்கு அரசு பொறுப்பு…

_ ஹலோ…

 சின்ன பகவதி பேசுறேன் 

நமக்கும்…ஒரு பதவி..!!!

கோவிந்தராஜ்

~ எனக்குனு யாருமே இல்லாத மாதிரி இருக்கு 

Mind voice ~ மாதிரி எல்லாம் இல்ல உனக்குனு யாரும் இல்ல

ArulrajArun

காலையில சாப்பிடுவது இட்லி 

~ சட்டசபைக்கு எதுக்கு வந்தார் அட்லி

.ச ப் பா ணி

ஒரு ஐநூறு ரூபாய்க்கு ஐயாயிரம் எண்ணுற மாதிரி சத்தம்.குடுக்காதப்பா..

ஒரு சத்தம் போதும் – atm

சாமுவேல் ராஜா

காதலனுக்கு மட்டும் தான் நிலா காதலியாக தெரியலாம் 

ஆனா அம்மாக்களுக்கு குழந்தைக்கு சோறு ஊட்ட நிலாவில் வடை சுடும் ஆயா தான் தெரியும்…!!

ச ப் பா ணி

ஏன் தம்பி பைக்குக்கு பெட்ரோல் 200,300,500 க்கு எல்லாம் அடிக்க மாட்டீங்களா?

இல்லங்க 100ரூபாய்க்கு மட்டும்தான். அதுக்கு மேல அடிச்சா ஆவியா போய்டுமாம்

லாக் ஆஃப்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel