தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 2026- 27-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழுவில்
- ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
- இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்
- வண்ண வடிவமைப்பாளர் பாலாஜி
- ஒலிப் பொறியாளர் சிவகுமார்
- இயக்குநர் வெற்றி மாறன்
- இயக்குநர் லிங்குசாமி
- இயக்குநர் பேரரசு
- படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்
- படத் தொகுப்பாளர் ராமர்
- கலை இயக்குநர் முத்துராஜ்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



யார் இந்த மனோஜ் பரமஹம்சா?
திரைப்பட ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா
- லுங்கிமேன் டேக்ஸ் ஏ ரைட்
- ஈரம்
- விண்ணைத்தாண்டி வருவாயா
- நண்பன்
- பூவரசம் பீப்பி
- லியோ
- பீஸ்ட்
ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியவர். இதில் முதல்வர் விஜய் நடித்த திரைப்படங்கள் நண்பன், லியோ, பீஸ்ட்.
இதே எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியின் முன்னாள் மாணவர் மனோஜ் பரமஹம்சா என்பதும் குறிப்பிடத்தக்கது.
