தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளைக் கட்சி தலைமை டெல்லி அழைத்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 16 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவைக் காங்கிரஸ் தலைமை அமைத்தது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மூத்த நிர்வாகிகள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் விடுத்துள்ள அழைப்பு கடிதத்தில், “வரும் டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் தேசியக் கூட்டணி தொடர்பான கூட்டத்தில் பின்வரும் தலைவர்கள் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இப்பவாச்சும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா பிக்பாஸ்?… வறுக்கும் ரசிகர்கள்!
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ!