மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By indhu

Sand Quarry Case: Supreme Court Orders Enforcement Department

மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 6) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட, கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களின் ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வுப் பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் உள்ளிட்ட பலருக்கு அமலாக்கத்துறை சார்பாக சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்மந்தபட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்றபோது, சம்மந்தப்பட்ட 5 மாவட்ட ஆட்சியர்களும் ஏப்ரல் 25ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கினை இன்று ஒத்திவைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “மணல் குவாரி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் மாவட்ட ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது.” என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவதை எதிர்த்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

நாய்களை வளர்க்க உரிமம் அவசியம்: ராதாகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share