பாரீஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்.. டொனால்ட் டிரம்ப் பகீர் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

Trump-France-Muslims

பிரான்ஸில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Trump) குற்றம்சாட்டியுள்ளார்.

பிரான்ஸில் கல்வி வசதிகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின்போது பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீவைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. அரசு கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதையடுத்து பாரீஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (அக்டோபர் 19-ந் தேதி) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரான்ஸ் நிலவரம் குறித்து டிரம்ப் பேசியதாவது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் என்னுடைய நண்பர். பிரான்ஸில் நீங்கள் மிகப்பெரிய தவறு செய்கிறீர்கள் என்று அவரிடம் நீண்ட காலத்திற்கு முன்பே கூறினேன். உலகம் முழுவதிலிருந்தும் எல்லோரையும் உங்கள் நாட்டுக்குள் அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எச்சரித்தேன்.

ADVERTISEMENT

உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் பிரான்ஸுக்குள் வந்து கொண்டிருந்தனர். பாரீஸ் மிக விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது. அது நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல.

மேக்ரானிடம் உங்கள் நாட்டின் எல்லைகளை மூட வேண்டும் என்று கூறினேன். நாங்கள் அமெரிக்காவின் எல்லைகளை மூடிவிட்டோம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இப்போது பிரான்ஸின் எல்லைகளே அவருக்குப் பிரச்சினையாக மாறியுள்ளன. இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share