பருவமழைக்கு நடுவே ‘பங்காளி’ வெயிலின் அலப்பறைகள்.. திருச்சி, ஈரோடு, மதுரை தகித்தது!

Published On:

| By Mathi

Heat Wave-Rain-Tamil Nadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், திருச்சி, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 19-ந் தேதி) வெயில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சி விமான நிலையத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு இயல்பாகப் பதிவாக வேண்டிய 32.4 டிகிரி செல்சியஸைவிட 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஈரோட்டில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

மதுரை விமான நிலையத்தில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். அதே நேரத்தில் மதுரை நகரில் 31.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

நாமக்கல்லில் 34.5 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 34.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 34.2 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதில் கரூர் பரமத்தியில் இயல்பைவிட 2.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் இயல்பைவிட 2.8 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 2.4 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவை இயல்பைவிட முறையே 1.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.

கோவை விமான நிலையத்தில் 32.4 டிகிரி செல்சியஸ், புதுச்சேரியில் 33.8 டிகிரி செல்சியஸ், வேலூரில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் காரைக்காலில் இயல்பைவிட 0.8 டிகிரி செல்சியஸ், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் மதுரை நகரில் தலா 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாகப் பதிவாகியுள்ளது.

மலைப்பகுதிகளான கொடைக்கானலில் 18 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 19.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய வெயில் நிலவரம்:

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share