வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (18.10.2026 காலை 7.30 மணி முதல் 19.10.2026 காலை 7.30 மணி வரை) பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையின் தரவுகளின்படி, மாவட்டத்தின் ஒட்டுமொத்த சராசரி மழைப்பொழிவு 23.34 மி.மீ ஆகப் பதிவாகியுள்ளதுடன்,மாவட்டம் முழுவதும் பதிவான மொத்த மழையின் அளவு 536.80 மி.மீ ஆகும்.
மழை விவரங்களின் முழுப் பட்டியல்:
பி.என்.பாளையம் (P.N.Palayam): 184.00 மி.மீ (மிக கனமழை)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (T.N.A.U): 81.60 மி.மீ (கனமழை)
மிதமான மழை பெய்த பகுதிகள்
கோவை தெற்கு வட்டம்: 52.00 மி.மீ
போத்தனூர் இரயில்வே நிலையம்: 45.00 மி.மீ
மதுக்கரை வட்டம்: 41.00 மி.மீ
மேட்டுப்பாளையம்: 28.00 மி.மீ
அன்னூர்: 20.00 மி.மீ
சிறுவாணி அடிவாரம்: 18.00 மி.மீ
லேசான மழை பெய்த பகுதிகள்
தொண்டாமுத்தூர் BDO அலுவலகம்: 15.00 மி.மீ
சூலூர் மற்றும் வாரப்பட்டி (PWD அலுவலகம்): தலா 14.00 மி.மீ
பொள்ளாச்சி வட்டம்: 6.00 மி.மீ
கிணத்துக்கடவு வட்டம்: 5.20 மி.மீ
மாக்கினாம்பட்டி (PWD IB): 5.00 மி.மீ
பீளமேடு விமான நிலையம் மற்றும் பில்லூர் அணை: தலா 3.00 மி.மீ
வால்பாறை PAP மற்றும் வால்பாறை வட்டம்: தலா 1.00 மி.மீ (மிக லேசான மழை)
மழை இல்லாத பகுதிகள்:
பொதுவாக மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் ஆனைமலை, ஆழியாறு, சின்கோனா, சின்னக்கல்லாறு மற்றும் சோலையாறு ஆகிய பகுதிகளில் நேற்று மழை எதுவும் பதிவாகாமல் வறண்ட வானிலை நிலவியுள்ளது.
