VB-G RAM G திட்டத்தில் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘விக்சித் பாரத் – கரன்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)’ (VB-G RAM G) திட்டத்தைத் தமிழக அரசு கடந்த ஜூலை 1, 2026 முதல் நடைமுறைப்படுத்தியது
மத்திய அரசின் திட்டத்தின்படி வழங்கப்படும் 125 நாட்கள் வேலையை முழுமையாக முடிக்கும் தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் சொந்த நிதி மூலமாக மேலும் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,
1.பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள்
2.தனித்து வாழும் பெண்கள்
3.மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்
4.பட்டியலின வகுப்பினர்
5.பழங்குடியின வகுப்பினர்
6.வன உரிமைகள் சட்டம், 2006-ன் கீழ் பயன்பெறும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழ்வோர் ஆகியோருக்கு கூடுதலாக இந்த 25 நாட்கள் வேலை வழங்கப்படும்.
இந்தப் கூடுதல் வேலை வாய்ப்புத் திட்டத்திற்காக, 2026-2027 நிதியாண்டின் திருத்தப்பட்ட வரவு செலவு மதிப்பீட்டிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை எடுத்து விநியோகம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க ஆணையருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணை நிதித் துறையின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
