தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% அதிகம்!

Published On:

| By Mathi

Tamil Nadu-rain-North East Monsoon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) வரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% அதிகமாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை விவரங்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, தமிழகத்தில் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மலைப் பகுதிகளில் ஊட்டியில் 12.2 டிகிரி செல்சியஸும், கொடைக்கானலில் 13.3 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வால்பாறையில் 15.5 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 14.7 டிகிரி செல்சியஸ், கோவை விமான நிலையத்தில் 23.6 டிகிரி செல்சியஸ், மதுரையில் 23.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை நுங்கம்பாக்கத்தில் 25.8 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கத்தில் 26.4 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சேலத்தில் 34.2 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 34.5 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 33.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை நுங்கம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸும், சென்னை மீனம்பாக்கத்தில் 33.5 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை அதிகம்

மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 1-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திலும் புதுவையிலும் இயல்பாக 95.1 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 106.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதன் மூலம் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% அதிகமாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் அமராவதி புதூரில் 92 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share