உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

Published On:

| By christopher

உக்ரைனின் எட்டு ஆளில்லா விமானங்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ;உக்ரைன் அரசு நேற்று கிரிமீய தீபகற்ப பகுதியருகே வான்வழியே ஏழு ஆளில்லா விமானங்கள் மற்றும் நீருக்கடியில் இரண்டு ஆளில்லா விமானங்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல் நடத்தியது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்போ அல்லது பாதிப்புகளோ எதுவும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இவற்றில் இரண்டு ஆளில்லா விமானங்கள், கடலோர பகுதியில் இருந்து சற்று தொலைவில் கருங்கடல் மீது சுட்டு வீழ்த்தப்பட்டன. ஐந்து ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் மின்னணு போர் படைகளைக் கொண்டு இடைமறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன. ஒரு ஆளில்லா விமானம்  கருங்கடலின் வடபகுதியில் கண்டறியப்பட்டு, நெருப்பு கொண்டு அழிக்கப்பட்டது என  ரஷ்ய பாதுகாப்பு  அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

ராஜ்

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா காய்கறி சாலட்

சத்யதேவ் லா அகாடமியை துவங்கி வைத்த ஸ்டாலின்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share