ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் அக்கவுண்ட்டில் ரூ.1000 வரவு வைப்பு!

Published On:

| By Kavi

தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ.1000-த்தை தமிழக அரசு வரவு வைத்து வருகிறது. 

ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9089 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்று அடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கையை ஏற்று, “ஓய்வு பெற்ற தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கப் பணியாளர் கருணை ஓய்வூதிய விதிகள் 2026″ன் படி அவர்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர கருணைத் தொகையாக ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி இன்று வரவு ரூ.1000 கருணை ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டுள்ளதால் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பால் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 2,000க்கும் அதிகமான பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share