தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
ராஜபாளையம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ராஜபாளையம் தொகுதி.. கடந்த 2 தேர்தல்களில் திமுகவின் தங்கபாண்டியன் தொடர்ந்து ஜெயிச்சுகிட்டு இருக்காரு.. திமுக இங்கே 3 முறையும் அதிமுக 4 முறையும் காங்கிரஸ் 2 முறையும் சிபிஐ 1 முறையும் வென்ற தொகுதி.
போன தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவின் தங்கபாண்டியனிடம் 3898 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாரு.
இந்த முறை திமுகவின் தங்கபாண்டியன் மீண்டும் களம் காண்கிறார்.
அதிமுக கூட்டணியில இந்த தொகுதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுகிறார்.
இங்கே அதிமுகவின் நடிகை கவுதமி போட்டியிட வேலைகளை செய்து வைத்திருந்தார். ஆனால் ஜான்பாண்டியன் கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டிருச்சு..
ராஜபாளையம் பொதுத் தொகுதியில தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பிரிசில்லா பாண்டியன் போட்டியிடுவது கவனம் பெற்றிருக்கு.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 38%
அதிமுக –33 %
தவெக- 19%
நாதக- 9% வாக்குகள் பெறும்
திமுகவின் தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்










