முதல் குவாலிபயர் போட்டியில் 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. punjab kings struggling in qualifier 1 against rcb
நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் குவாலியர் போட்டிக்கு முன்னேறின.
அதன்படி முல்லன்பூரில் இன்று (மே 29) நடந்து வரும் குவாலிபயர் போட்டியில் டாஸ் வென்று ஆர்.சி.பி அணியின் கேப்டன் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சொதப்பியுள்ளது.
அந்த அணியின் அதிரடி துவக்கவீரரான பிரியான்ஷ் ஆர்யா, யாஷ் தயாளின் பந்தில் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரனும் 18 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் வெளியேறினார்
அதன்பின்னர் வந்த ஜோஸ் இங்கிலீஷ் (4), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (2), வதேரா (8), ஷசாங்க் சிங் (3) முஷீர் கான் (0) என அனைவருமே ஆர்.சி.பி பவுலர்களின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தற்போது பஞ்சாப் அணி 11 ஓவர்கள் முடிவில் 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவில் சிக்கியுள்ளது.
பெங்களூரு அணி தரப்பில், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். புவனேஷ்குமார் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
