தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் பூந்தமல்லி சட்டசபை தொகுதியை கைப்பற்றப் போவது யார்? என பார்க்கலாம்
வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்


சாதி வாரியான வாக்காளர்கள்

2021 சட்டசபை தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவு

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பூந்தமல்லி தனி தொகுதி.. போன டைம் 2021-ல் 2-வது முறையாக திமுகவின் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வானார். இந்த முறையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணசாமி போட்டி போடுகிறார். அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் ஏழுமலை போட்டியிடுகிறார்.. இவர் 2016-ல் அதிமுக எம்.எல்.ஏ.வானார்.. பின்னர் தினகரன் அணிக்கு போய் பதவியை இழந்தார்.. அதனால் நடந்த 2019 தேர்தலில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் ஏழுமலை. அந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்தில் இருந்தது. போன 2021- தேர்தலில் தேமுதிகவுடன் அமமுக கூட்டணி வைத்த போது இதே தொகுதியில டிஏ ஏழுமலை போட்டியிட்டு 5-வது இடத்துக்கு போனாரு.. அந்த தேர்தலில் வெறும் 8,805 ஓட்டுகள்தான் அவருக்கு கிடைச்சது.. 2021-ல் இந்த தொகுதியில திமுக ஜெயிச்சப்ப 2-வது இடம் பாமகவுக்கும் 3-வது இடம் நாம் தமிழர் கட்சிக்கும் 4-வது இடம் மநீமவுக்கும் கிடைச்சது. இப்ப கள நிலவரம் எப்படி இருக்குதுன்னா திமுக இந்த முறையும் நல்ல லீடிங்கில் இருக்கிறது.
நமது சர்வே முடிவுபடி,
திமுக கூட்டணி- 45%
அதிமுக கூட்டணி – 25%
தவெக- 23%
நாதக- 6 % வாக்குகள் பெறும்
திமுகவின் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. எளிதாக வெற்றி பெறுவார் என கள நிலவரம் கூறுகிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
