ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், விராட் கோலி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. police reaction on complaint against virat kohli
கடந்த 3ஆம் தேதி நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று ஐபிஎல் சாம்பியன் கோப்பையை 18 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக கைப்பற்றியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
தொடர்ந்து மறுநாள் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.

இதுதொடர்பான வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் கொண்டாட்ட நிகழ்ச்சியின் மேலாளர்கள் மற்றும் ஆர்சிபி உயர் அதிகாரி நிகில் சோசலே உட்பட நான்கு பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நேற்று உத்தரவிட்டது.
தங்களுக்கு எதிரான எப்ஐஆரை திரும்பப் பெற வலியுறுத்தி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) நிர்வாகிகளின் மனுவை ஏற்ற கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்களை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.

கர்நாடக காவல்துறையைச் சேர்ந்த ஏசிபி பாலகிருஷ்ணா, டிசிபி சேகர் எச்.டி, கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ், பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் கிரிஷ் ஏ.கே ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ’11 பேர் பலியான சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் #ArrestViratKohli என்ற ஹேஸ்டேக்கும் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் ஆனது.

கோலி மீது புகார்!
இதற்கிடையே கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலி மீது சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார்.
அதில், புகார்தாரரான சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ், ”பெங்களூர் ஆர்சிபி அணியின் விராட் கோலி, இதுபோன்ற சூதாட்டத்தில் பங்கேற்று மக்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடத் தூண்டி இந்த துயரத்தை ஏற்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர். எனவே, இந்த வழக்கில் விராட் கோலி மற்றும் மற்ற ஆர்சிபி அணியினர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும்“ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், விராட் கோலி மீது இதுவரை எந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக அவருக்கு எதிரான புகார் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க
RCB இன் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, பெங்களூரு காவல்துறை வியாழக்கிழமை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), DNA என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் RCB உரிமையாளர் மீது குற்றமற்ற கொலை, சட்டவிரோத கூட்டம் மற்றும் பிற கடுமையான குற்றங்களின் கீழ் முறையான புகார் (FIR) பதிவு செய்தது.
பெங்களூரு காவல்துறையுடன் சேர்ந்து, குற்றப்பிரிவு RCB மற்றும் நிகழ்வு மேலாண்மை நிர்வாகிகளை கைது செய்தது, பின்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கடுமையான பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.