பெரியார் அறிவுலகத்தில் 2,000 போலி நூல்கள்- தேசவிரோதச் செயல்; உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு கோரிக்கை!

By Mathi

|

Published on 9 Nov 2026, 11:51 AM

Periyar arivulagam

கோவை பெரியார் அறிவுலகத்தில் 2,000 போலி நூல்கள் இடம்பெற்றிருப்பது தமிழ்ச் சமூகத்தின் அறிவுச் செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் இந்த முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்.

சமூகத்தில் அறிவுப்பரவலுக்கான சீரிய வழியென நூலகத்தைக் கருதி 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தை இயற்றிய, 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்கத்தை உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், சிறப்புப் பகுதிநேர நூலகங்கள் என 4,755 நூலகங்கள் இயங்கிவருகின்றன.

ADVERTISEMENT

இவற்றுக்கான நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்வதில் குறும்புடிகளோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வலியுறுத்திவந்த நிலையில், “வெளிப்படையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வெளியிடப்பட்டது. அப்போதிருந்து செயல்முறையிலிருக்கிற இந்தக் கொள்கைக்கட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களின் மையநூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த அரசாணையின்படி, புனைவு மற்றும் பொதுநூல்களைப் பரிந்துரை செய்வதற்காக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களிலிருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது 13 பேர் கொண்ட தேர்வுக்குழு. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் பட்டியலிலுள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றை வெளியிட்டுள்ள பதிப்பகங்களுடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக்குழு. இம்மூன்றுக் குழுக்களின் பரிந்துரைகளையும் கூாய்ந்து ஒப்புதல் வழங்குகிறது 5 பேர் கொண்ட உயராய்வுக்குழு.

ADVERTISEMENT

இவ்வளவு சீரான பரிசீலனைகளின் நிறைவிலேயே நூலகங்கள் கொள்முதல் செய்யப்படுவதாக நாம் நம்பியிருந்த நிலையில், எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் 2026 அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்றும் முகநூலில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழொன்றில் 2026 நவம்பர் 6 அன்றும் எழுதிய கட்டுரையும் கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒருகுதி போலியானவை என்கிற அறிவுலகமே அதிர்ந்துபோகிற தகவலை வெளிக்கொணர்ந்துள்ளன.

இதன்படி, ‘அகல் விளக்கு’ என்கிற பதிப்பகத்திடமிருந்தும் அந்தப் பதிப்பகத்தின் முகவரியிலேயே இயங்குகின்ற பீனிக்ஸ் பப்ளிகேஷன் என்கிற மற்றொரு பதிப்பகத்திடமிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1800 முதல் 2000 நூல்கள் போலியானவை என்று முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன.

இவ்விரண்டு பதிப்பகங்களும் இணையவெளியில் கொட்டிக்கிடக்கும் பல்துறை சார்ந்த தரவுகளைத் திரட்டி அவற்றை போலியான எழுத்தாளர்களின் பெயரில் தப்பும் தவறுமாக வெளியிட்டுள்ளன. மட்டுமின்றி போலியான இந்நூல்களுக்கு கொடுக்கப்பட்ட விலையோ பொதுவாக இதேயளவு நூல்களுக்கு கொடுக்கப்படுவதை விடவும் பன்மடங்கு அதிகம்.

போலியான எழுத்தாளர்களை களமிறக்கியுள்ள இந்த முறைகேட்டினால் மெய்யான எழுத்தாளர்களின் ஆய்வாளர்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் இது, அவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்து பொதுவெளியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கொப்பானதொரு தீங்குமாகும்.

உண்மையினை கற்றுணர்வதற்கு வாசகர்களுக்கும் போட்டித்தேர்வர்களுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் உள்ள உரிமை, இந்தப் போலியான நூல்களில் மலிந்துள்ள பிழையான தகவல்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. போலியான ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதன் மூலம் பதிப்புத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் பதிப்பகங்களும் அவற்றின் ஊழியர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியில், மாநிலத்தின் வேறுபல நூலகங்களிலும் இந்தப் பதிப்பகங்களின் போலி நூல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதேபோல வேறுபல பதிப்பகங்கள் இருப்பதாகவும், ஆங்கில நூல்களின் உண்மைத்தன்மையும் சந்தேகத்திற்குரியவையே என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அறிவுச்சேகரமான நூலகங்களைப் பாதுகாக்கவும், நூலகங்களுக்குள் அதற்கிசைவான நூல்கள் மட்டுமே இருப்பதை உறுதிசெய்திட பொது நூலக இயக்கமும் தமிழ்நாடு அரசும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இதன்பொருட்டு,

  • நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாக குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்ப்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும். அதனிமித்தம் இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
  • அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்.
  • போலியான நூல்களை வெளியிட்டு அறிவுலகத்திற்கும் அரசுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ள அகல் விளக்கு, பீனிக்ஸ் மற்றும் இதேபோன்று வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகை உரிய வகையில் திரும்பப்பெறப்பட வேண்டும்.
  • இந்தப் பதிப்பகங்களின் போலிநூல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு நூலகங்களிலிருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்ய வேண்டும்.
  • மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • நூலகத்துறைக்குள் வருங்காலத்தில் எவ்வவகையான முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான திருத்தங்களுடன் “வெளிப்படையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வலுப்படுத்தப்பட வேண்டும்.
  • நூல் பரிந்துரைக்குழுவினர் தாங்கள் பரிந்துரைத்த பட்டியலிலிருந்தே நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மறுஉறுதி செய்துகொள்ள ஏதுவாக இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்டோர்:

து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி
எஸ்.வி.ராஜதுரை, ஆய்வாளர்
ஆர்.பாலகிருஷ்ணன், ஆய்வாளர்
பேரா.லெ.ஜவகர் நேசன், மேனாள் துணைவேந்தர்
பேரா வீ.அரசு, ஆய்வாளர்
பேரா அருணன், ஆய்வாளர்
வண்ணதாசன், எழுத்தாளர்
அறிவுமதி, கவிஞர்
டிராட்ஸ்கி மருது, ஓவியர்
பேரா கா.அ.மணிக்குமார், ஆய்வாளர்
முனைவர் து.ரவிக்குமார், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்
த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியலாளர்
கோலப்பன், பத்திரிகையாளர், தி ஹிந்து நாளிதழ்
பொன் தனசேகரன், பத்திரிகையாளர்
ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
நிழல்வண்ணன், மொழிபெயர்ப்பாளர்
மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்
ரோஹிணி, திரைக்கலைஞர்
சத்யராஜ், திரைக்கலைஞர்
பேரா மு.இராமசாமி, நாடகவியலாளர்
பிரளயன், நாடகவியலாளர்
அ.மங்கை, நாடகவியலாளர்
ஞானராஜசேகரன், திரை இயக்குநர்
எம்.சிவக்குமார், திரை இயக்குநர்
எம்.மணிகண்டன், திரை இயக்குநர்
டிஜெ ஞானவேல், திரை இயக்குநர்
கமலக்கண்ணன், திரை இயக்குநர்
கெளதம்ராஜ், திரை இயக்குநர்
தீபக், திரை இயக்குநர்
அதியன் ஆதிரை, திரை இயக்குநர்
ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர்
பேரா.சிவக்குமார், ஆய்வாளர்
பேரா. இரா.காமராசு, ஆய்வாளர்
கோ.ரகுபதி, ஆய்வாளர்
நிருத்யா பி, நடனக்கலைஞர்
கோவன், பாடகர்
ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
ச.பாலமுருகன், எழுத்தாளர்
க.உதயசங்கர், எழுத்தாளர்
குட்டி ரேவதி, எழுத்தாளர்
இரா.நடராசன், எழுத்தாளர்
பாஸ்கர் சக்தி, எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர்
நா.சுகுமாரன், எழுத்தாளர்
சுகிர்தராணி, எழுத்தாளர்
என்.ஸ்ரீராம், எழுத்தாளர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
ஈரோடு சர்மிளா, எழுத்தாளர்
அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர்
அ.வெண்ணிலா, எழுத்தாளர்
நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர்
பா.மகாலட்சுமி, எழுத்தாளர்
நிகழ் அய்க்கண், எழுத்தாளர்
யெஸ்.பாலபாரதி, எழுத்தாளர்
இ.பா. சிந்தன், எழுத்தாளர்
கெளதமன், எழுத்தாளர்
நக்கீரன், எழுத்தாளர்
பா.வெங்கடேசன், எழுத்தாளர்
அழகியபெரியவன், எழுத்தாளர்
கரிகாலன், எழுத்தாளர்
சாம்ராஜ், எழுத்தாளர்
அ,உமர் பாரூக், எழுத்தாளர்
நீதிமணி, எழுத்தாளர்
ம.கண்ணம்மாள், எழுத்தாளர்
ம.மணிமாறன், எழுத்தாளர்
யாழன் ஆதி, எழுத்தாளர்
மு.ஆனந்தன், எழுத்தாளர்
ஞா.சத்தீஸ்வரன், எழுத்தாளர்
ம.காமுத்துரை, எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
அ.கரீம், எழுத்தாளர்
ம.சுசித்ரா, மொழிபெயர்ப்பாளர்
வேல்கண்ணன், எழுத்தாளர்
முத்துவேல், எழுத்தாளர்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எழுத்தாளர்
முத்துவேல், எழுத்தாளர்
இரா.தனிக்கொடி, பாடலாசிரியர்
மீரான் மைதீன், எழுத்தாளர்
லக்‌ஷ்மணசாமி ரங்கசாமி (ஒடியன்), எழுத்தாளர்
ந.பெரியசாமி, எழுத்தாளர்
ஜா.மாதவராஜ், எழுத்தாளர்
ராஜசங்கீதன், எழுத்தாளர்
நந்தன் கனகராஜ்,எழுத்தாளர்
விழியன், எழுத்தாளர்
முத்துநாகு, எழுத்தாளர்
சக்திசூர்யா, எழுத்தாளர்
ராஜுலா ரிஜ்வான், எழுத்தாளர்
சித்ரா சிவன், எழுத்தாளர்
பா.ஜீவசுந்தரி, ஊடகவியலாளர்
ஆ.காமராஜ், ஆசிரியர், மின்னம்பலம் இணைய இதழ்
புனிதபாண்டியன், ஆசிரியர், தலித் முரசு
முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே
நாகராஜன், பாரதி புத்தகாலயம்
நல்லு இரா.லிங்கம், நாற்கரம் பதிப்பகம்
ஜீவ கரிகாலன், யாவரும் பதிப்பகம்
சிவ செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம்
சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து
மு.ஹரிகிருஷ்ணன், ஆசிரியர், மணல்வீடு
சாதிக், அடையாளம் பதிப்பகம்
வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் இதழ்
த.நீதிராஜன், முதன்மை ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ்
விஜயானந்த் சுப்புராஜ், பயணி வெளியீட்டகம்
ஸ்ரீரசா, காலம் வெளியீடு
அற்புதராஜ், எழுத்தாளர்
கரன்கார்க்கி, எழுத்தாளர்
புதியமாதவி, எழுத்தாளர்
சரிதா ஜோ, எழுத்தாளர்
எஸ்.ஏ.பெருமாள், ஆய்வாளர்
ப.கு.ராஜன், ஆய்வாளர்
கவின்மலர், ஊடகவியலாளர்
கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
ஸ்டாலின் சரவணன், எழுத்தாளர்
க.சரவணன், எழுத்தாளர்
பாமரன், எழுத்தாளர்
பவுத்த அய்யனார், எழுத்தாளர்
வழ.தங்கராஜ், எழுத்தாளர்
எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர்
தமிழகன், எழுத்தாளர்
மு.இக்பால் அகமது, எழுத்தாளர்
எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர்
இரா.மோகன்ராஜன், எழுத்தாளர்
பேரா.என்.சிவராமன், மொழிபெயர்ப்பாளர்
அமரந்தா, மொழிபெயர்ப்பாளர்
கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
அ.அருள்மொழி, திராவிடர் கழகம்
மதுக்கூர் ராமலிங்கம், தலைவர், தமுஎகச
களப்பிரன், பொதுச்செயலாளர், தமுஎகச
மரு.அறம், பொதுச்செயலாளர், தகஇபெம
பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை
சே.வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர், அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு இயக்கம்
அ.லியாகத் அலி, செயலர், அஞ்சுமன் நூற்றாண்டு நூலகம்
செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை
ச.சிவக்குமார், மாநிலச்செயலாளர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்
பேரா அ.கருணானந்தம், ஆய்வாளர்
அ.ஜெகன்னாதன், ஆய்வாளர்
அ.குமரேசன், ஊடகவியலாளர்
சிகாமணி, ஊடகவியலாளர்
விஸ்வம், ஓவியர்
நட்ராஜ், ஓவியர்
மணிவண்ணன், ஓவியர்
சரண்ராஜ், ஓவியர்
விநாயகமுருகன், எழுத்தாளர்
ஓடை பொ.துரையரசன், இடது இதழாசிரியர்
பேரா அரங்க மல்லிகா, எழுத்தாளர்
மயிலை பாலு, எழுத்தாளர்
ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வாளர்
கண.குறிஞ்சி, புதுமலர் இதழாசிரியர்
நடராஜன், சந்தியா பதிப்பகம்
முஹமது சிராஜுதீன், பாரதி புத்தகாலயம்
நீலகண்டன், கருப்புப் பிரதிகள்
ம.மதிவண்ணன், எழுத்தாளர்
சித்ரன், எழுத்தாளர்
சாலை செல்வம், எழுத்தாளர்
லாவண்யா சுந்தரராஜன், எழுத்தாளர்
ஜான்சிராணி, எழுத்தாளர்
கவிதா முரளிதரன், ஊடகவியலாளர்
ஜெ.தீபலட்சுமி, எழுத்தாளர்
பொ.வேல்சாமி, ஆய்வாளர்
பேரா பக்தவச்சல பாரதி, ஆய்வாளர்
மா.ச.மதிவாணன், ஊடகவியலாளர்
மால்கம், எழுத்தாளர்
இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர்
கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
ஜெயராணி, ஊடகவியலாளர்
ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
கி. வே. பொன்னையன். சமூக செயற்பாட்டாளர்.
மே.து. ராசுகுமார், ஆய்வாளர்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel