இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்!

By Balaji

|

Published on 14 Jan 2018, 12:00 AM

இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக அணு ஆயுதத்தை சோதனை செய்ய தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று (ஜனவரி 13) மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதத்தை உபயோகிக்குமா? என்ற கேள்விக்கு, இது பாகிஸ்தானின் நியூக்ளியர் ப்ளஃப் . அரசு கேட்டுக் கொண்டால் எல்லைத் தாண்டி எந்தவிதமான நடவடிக்கையிலும் இறங்க நம் ராணுவம் தயாராக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது ட்விட்டர் பக்கத்தில் , “இந்திய ராணுவத் தளபதி மிக பொறுப்பற்றத்தனமாக ஒரு பதிலை கூறியுள்ளார். அவரது பதவிக்கு ஏற்றாற் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. இது அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வழிகோலும். அதுதான் விருப்பமென்றால், அணு ஆயுதத்தை சோதனை செய்ய நாங்கள் தயார். அப்படிச் செய்வதன் மூலம், தளபதியின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் அரசுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியபோது ‘இந்தியாவின் ஊதுகுழலாக அமெரிக்கா செயல்படுகிறது’ என்று கவாஜா ஆசிப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.,”

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel