Skip to content
  • முகப்பு
  • அரசியல்
      அரசியல்
      டிஜிட்டல் திண்ணை
  • சமூகம்
      தமிழ்நாடு
      இந்தியா
      உலகம்
  • பொழுதுபோக்கு
      செய்தி
      சினிமா விமர்சனம்
      ஓடிடி
      போட்டோ கேலரி
  • பணம்
      பொருளாதாரம்
      சந்தை
      முதலீடு
      வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
      உடல்நலம்
      மனநலம்
      வீட்டு மருத்துவம்
      ரெசிப்பி
      பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு!

By christopher

|

Published on 25 Oct 2024, 9:08 AM

Order to open bank account through ration shops across Tamil Nadu!
Follow us on
Google News
Add As A Preferred
Source On A Google

Share:

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்திய கால வேளாண் கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டில் 18.36 லட்சம் விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.15,500 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது சங்கங்களில் விவசாய உறுப்பினர்களாக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆக உள்ளது. எனவே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு கடன் நிறுவனங்களில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ADVERTISEMENT

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி வங்கியினால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமையப் பெற வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் குடிமைப்பொருட்கள் பெறும் பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களும் நியாயவிலை கடைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் பொதுமக்களை சென்றடையும் வகையில், நியாய விலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், பல்வேறு அரசின் கடன் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளவும், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்களையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து நியாய விலை கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்புத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் குறித்தான கையேடுகளை விநியோகிக்கவும், நியாயவிலை கடை பணியாளர்களை கொண்டு சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு வழங்கி, விண்ணப்பங்களை கேஒய்சி (KYC) விவரங்களுடன் பூர்த்தி செய்து, நியாய விலை கடை பணியாளர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும், அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக, கணக்கு ஒன்றுக்கு ரூ.5 வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நியாயவிலை கடைகள் மூலம் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள் மற்றும் நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்தான கையேடுகள் மற்றும் வங்கியின் மூலம் வழங்கப்படும் மின்னணு பரிவர்த்தனை வசதிகள், ஏடிஎம் கார்டு வசதியினையும் மற்றும் வங்கி சேவையை எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கான கணக்கு தொடங்கியவுடன், இந்த வசதிகள் அடங்கிய தொகுப்பை (Account opening Kit) அவர்களுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

நியாயவிலை கடைகள் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகள் குறித்தான முன்னேற்றத்தினை கண்காணித்து தெரிவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மெய்யழகன் முதல் ஹிட்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

இந்த ஆண்டு தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel
சமீபத்திய பதிவுகள்
  • கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே : அப்டேட் குமாரு

    16 Nov 2026, 11:53 PM

  • Periyar Arivu Ulagam-CBE

    பெரியார் அறிவுலகம் : ChatGPT மூலம் தயாரான புத்தகங்கள்.. அதிர வைக்கும் FIR விபரங்கள்

    16 Nov 2026, 10:07 PM

  • தங்கம் இறக்குமதிக்கு வெளிநாட்டை நம்ப வேணாம் : நிதி ஆயோக்கின் புதிய கொள்கை வரைவு!

    16 Nov 2026, 7:43 PM

  • அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது!

    16 Nov 2026, 7:21 PM

  • Delhi Sonia Book CM Vijay

    டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு!

    16 Nov 2026, 6:50 PM

  • மஹாநதி கோல்ஃபீல்ட்ஸ் ஐபிஓ நவம்பர் 19-ல் திறக்குது! பங்கு விலை ரூ.129 முதல் ரூ.136…!

    16 Nov 2026, 6:32 PM

  • பென்ஸ் காரில் வந்த சு.வெங்கடேசன்… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் விமர்சனம்!

    16 Nov 2026, 6:23 PM

  • கோவை: ஷோரூமிற்குள் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகி – வீடியோ வைரலான நிலையில் உரிமையாளர் விளக்கம்

    16 Nov 2026, 6:16 PM

  • Arun Raj-Stalin

    ‘குதிரை பேரம்’ பற்றி ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்? அருண்ராஜ் கேள்வி

    16 Nov 2026, 5:58 PM

  • Aadhav Arjuna-CPI CPM

    விடாது வெளுக்கும் இடதுசாரிகள்.. டெல்லியில் சிபிஐ, சிபிஎம் தலைவர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா

    16 Nov 2026, 4:40 PM

About Us Contact Us Privacy Policy Terms & Condition
© 2026 All Rights Reserved to Minnambalam | Web Developed by Reptus