தாம்பரத்துக்கு புதிய காவல் ஆணையர் நியமனம்!

By Kavi

|

Published on 12 Nov 2026, 6:41 PM

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

”காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் ஆர்.தினகரன் ஐபிஎஸ், மறு உத்தரவு வரும் வரை சென்னை காவல்துறை செயலாக்கப் பிரிவு  கூடுதல் டிஜிபி பொறுப்பை கூடுதல் பொறுப்பாக  கவனிப்பார்” என்று தமிழக உள்துறை செயலாளர் அ.கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் காவல் ஆணையராக  செயல்பட்டு வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக தாம்பரம் ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel