ஹெல்த் டிப்ஸ்: மூட்டுவலி உள்ளவர்களின் கவனத்துக்கு…

Published On:

| By Selvam

“மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக் கொள்கிறோம். வயதாகும்போது, உடல் சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல.

வாகனத்தின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் பாகங்கள் தேய்வதைப் போலத்தான் வயோதிகத்தில் ஏற்படும் உடல் உறுப்புகளின் தேய்மானத்தையும் தவிர்க்க முடியாது. அப்படித்தான் எலும்புகளின் தேய்மானமும் அதனால் ஏற்படும் மூட்டுவலியும். இந்த நிலையில் மூட்டுவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை,  செய்யக்கூடாதவை இங்கே…

செய்ய வேண்டியவை:

கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்கள், மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும்.

இடுப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் கைத்தடியைப் பயன்படுத்துவது நல்லது.

தகுந்த காலணிகளை உபயோகப்படுத்துவது அவசியம்.

பாதத்துக்குத் தகுந்தவாறு மென்மையான, உயரம் அதிகம் இல்லாத காலணிகளை அணிவது நல்லது.

செய்யக்கூடாதவை:

முழங்கால் மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் அமர்வதும், அடிக்கடி மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்கவும்.

கழுத்தில் வலி உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

உயரம் அதிகமுள்ள தலையணையைப் பயன்படுத்தக் கூடாது.

தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாதுளை ராய்த்தா

வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி புதிய அறிவிப்பு!

ஆபத்தான ஹீட் ஸ்ட்ரோக்… அறிகுறிகள் என்ன? : எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

GTvsDC : சொந்த மைதானத்தில் மோசமான தோல்வி : குஜராத் ரசிகர்கள் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share