முசிறி அருகே வேன் மோதி 7 பேர் உயிரிழப்பு

By Pandeeswari Gurusamy

|

Published on 22 Nov 2026, 5:39 PM

முசிறி அருகே வேன் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மாணிக்கம், சங்கிலி, முருகன், ராஜேஷ், சக்திவேல் சுப்பிரமணியன், உள்ளிட்ட 10 பேர் செங்கல் சூளையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழா ஒன்றில் பங்கேற்பதற்காக திருக்காட்டுப்பள்ளியிலிருந்து ஆம்னி காரில் நாமக்கல் சென்றுள்ளனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் தங்களின் சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது துறையூர் – முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே அவர்களின் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கார் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel