ADVERTISEMENT

மொபைல் ஆலோசனை மையம் : அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Monisha

அனைத்து பள்ளிகளிலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக ஏன் செயல்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைத் தடுக்க மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் இந்த ஆலோசனை மையம் அனைத்து பள்ளிகளிலும் முறையாகச் செயல்படவில்லை என்று மதுரையைச் சேர்ந்த வெர்னிகா மேரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைத் தடுக்க மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அரசாணையின்படி பள்ளிகளில் மொபைல் ஆலோசனை மையங்கள் இயங்குகிறதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு முறையாகப் பதிலளிக்கப்படவில்லை.

எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனு இன்று (நவம்பர் 17) நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”2012-ம் ஆண்டே அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது, ஆனால் இதுவரை பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையம் முறையாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படாதது ஏன்?” எனத் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.

மேலும், மொபல் மனநல ஆலோசனை மையம் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மொபைல் மனநல ஆலோசனை மையம் அமைத்து முறையாகப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மோனிஷா

ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

கால்பந்து பரிசுத்தொகை: 40 மில்லியன் அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share