அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கால தாமதமின்றி ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கல்வித்துறையில் நிர்வாக காரணங்களால் தொடக்க கல்வி மாவட்டம்,இடைநிலைகல்வி மாவட்டம், தனியார் பள்ளி கல்வி அலுவலகம் என வருவாய் மாவட்டத்திற்கு ஏற்ப, பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுகிறது.
ஆனால் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் இருந்துவரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கால தாமதமின்றி ஊதியம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஊதியம் பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் ஊதிய பட்டியலை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊதியப் பட்டியலை அரசு கருவூலத்தில் சமர்ப்பித்து ஊதியம் பெற்று உடனடியாக வழங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
கலை.ரா
சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!
வீராங்கனை பிரியாவுக்காக பாஜகவின் 2 திட்டம்!