மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தி.மகேஷ்குமார் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

ADVERTISEMENT

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வேலூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  வேலூர்,  அணைக்கட்டு,  குடியாத்தம் (தனி),  வாணியம்பாடி,  ஆம்பூர் மற்றும் கீழ்வைத்தினன் குப்பம் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

ADVERTISEMENT

 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 40% வாக்குகளைப் பெற்று மீண்டும் வேலூர் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி 21% வாக்குகளைப் பெறுவார் என்றும் 

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தி.மகேஷ்குமார் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, வேலூர் தொகுதியில் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

வேலூர் வெற்றி வெயில் யார் மீது? | Minnambalam Mega Survey 2024 | Vellore | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?

மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று?

மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share