2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.
இந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆர்.மணி களமிறங்கியுள்ளார்.
அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,
களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தர்மபுரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.
18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…
திமுக வேட்பாளர் ஆர்.மணி 37% வாக்குகளைப் பெற்று தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.
பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்
அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் 28% வாக்குகளைப் பெறுவார் என்றும்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக…, தர்மபுரி தொகுதியில் இந்த முறை ஆர்.மணி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.
மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன?
மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன?
மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை?
மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?
மின்னம்பலம் சர்வே வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிறு விளக்கம்…..
என் அறிவுக்கு எட்டிய வரை….
தருமபுரி பாராளுமன்றத் தொகுதி சர்வே 100% சரி, ஆனால் பாமக இரண்டாம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நான் தருமபுரி தொகுதியை பற்றி நன்கு அறிந்த வரை பார்த்து வருகின்றேன். இந்த முறை பாமக 2 இடம் வருவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு.
தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் பாமக தனித்து 2.3 இலட்சம் வாக்குகளை பெறுவது என்பது மிக கடினம்.
2014 பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் பாமக 42.5% அதாவது 4,67,775 வாக்குகள் பெற்றது.
அதே 2014 தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் 3,90,718.
அதே 2014 தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 180110
2014-லில் பாமக வெற்றி பெற பல காரணங்கள்?
1.இளைவரன் திவ்யா காதல் பிரச்சனையால் வன்னியர் மற்றும் பிற பிசி சமூக வாக்குகள் மொத்தமாக பாமக பெற்றது.
2முல்லைவேந்தனை திமுக தலைமை மொத்தமாக ஓரம் கட்டியது.
3.அதிமுக.வில் கே.பி முனுசாமி, பாமக-விற்கு பணம் கொடுத்தார் என்ற குற்றசாட்டால் தேர்தலுக்கு பிறகு அமைச்சர் பதவி பறிபோனது.
இன்று பாமக தருமபுரி தொகுதியில் அருமையான பிரச்சாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றது. மறுக்கவில்லை, அதேபோல திமுக, அதிமுக தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய போதிய நேரம் இல்லை. பல ஊர்களுக்கு பிரச்சாரத்திற்கு செல்லவே இல்லை.
2009-ல் பாமக இதேபோன்று பிரச்சாரம் செய்தது…. ஆனால் டாக்டர் செந்தில் தோல்வி அடைந்தார்.
பாமக உண்மையான நிலவரத்தை பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டால் குமுறுகின்றனர்.
2 இடம் பாமக வருவதற்கு 100% வாய்ப்பு இல்லை, 3ம் இடமே பாமக பெறும்.