’தீபாவளி கொலைகள்’ புதிது அல்ல- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

By Mathi

|

Published on 9 Nov 2026, 6:53 PM

Minister Rajmohan

பண்டிகை நாளான தீபாவளி தினத்தன்று ‘கொலைகள்’ அதிகமாக நடப்பது புதிது அல்ல என அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம் சர்ச்சையாகி இருக்கிறது.

தீபாவளி நாளில் தமிழகத்தில் 11 படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆளும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம்: பண்டிகை நாளான தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த தீபாவளிக்கு 6 படுகொலைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய தீபாவளி அன்றைக்கு 11 படுகொலைகள் நடந்திருக்கின்றன. அப்படியானால் பண்டிகை நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது புதிது அல்ல.

ADVERTISEMENT

ஆனால், திட்டமிட்டு ஆளும் அரசாங்கத்தின் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக டிடிவி தினகரன் அறிக்கை வெளியிடுகிறார். உடனே கனிமொழி அறிக்கை வெளியிடுகிறார். அடுத்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார். ஆளுங்கட்சியின் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகத் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் எதிரிக்கட்சிகளாகச் செயல்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel