இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
மாவட்ட கலக்டருக்கே
சிங்க பெண் படை பாதுகாப்பு வேணும் போலயே.

ArulrajArun
மனம் மூடநம்பிக்கையை தரும்
பணம் முழு நம்பிக்கையை தரும்.,

ச ப் பா ணி
மோதிரத்தை எந்த விரலில் போடுவது என பெண்களும்,
எந்த கடையில் வைப்பது என ஆண்களும் யோசிக்கின்றனர்

TamilNadu Updates
அரசு அதிகாரிகள் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை
அப்படி என்ன ஒத்துழைப்பு கொடுக்கல
மெசேஜ் பன்னா ரீப்ளை பன்ன மாட்றாங்க

ஆல்தோட்டபூபதி
இதுவரை 69 எம்.எல்.ஏக்கள் ரிசார்ட் வந்துள்ளனர்.. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ, ‘எவன்டா 3 நாள் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிறது’ என்று கூறி, ‘எவன் எம்.எல்.ஏனு எவனுக்கும் தெரியாது, எனக்கு பதிலா நீ போ’ என்று தனது ட்ரைவரை அனுப்பியுள்ளாராம்.. – நம்பந்தகுந்த சோர்ஸ்

balebalu
மீட்டிங் முடிஞ்சு MLA, அமைச்சர் எல்லாரும் இன்னிக்கு சோக முகத்தோடு வருவாங்க தான
அதான் இல்ல
CM எங்களை எவ்வளவு கியூட்டா திட்டினார் தெரியுமா ன்னு ரீல்ஸ் போட்டு பேட்டி கொடுப்பாங்க

ச ப் பா ணி
தி.மு கவும் புக் வாங்கல
த வெ.கவும் புக் வாங்கலனா
யார் தாங்க புக்கு வாங்கினாங்க

mohanram.ko
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… எப்படி கஷ்டப்பட்டு தீபாவளி லீவுக்கு ஊருக்கு போனேனோ ….அதே கஷ்டத்தோடு திரும்ப சென்னைக்கு வந்துட்டேன்னு சொல்லு…

கோழியின் கிறுக்கல்!!
பிரச்சனையோ, மகிழ்ச்சியோ எதுவா இருந்தாலும் கோலி சோடா மாதிரி பொங்க கூடாது,
குளிர்ந்த நீர் மாதிரி கூலா டீல் பண்ணி பழகணும்!!

அண்ணாச்சி
தீபாவளி வாழ்த்து சொல்லுவதற்கு தான்
MLAக்கள்… மீட்டிங்…!!
வேற ஒன்னும் இல்லையாம்…!!

லாக் ஆஃப்









