மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று மார்ச் 18 கூடுகிறது.
கட்சியின் தலைமை நிலையமான ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜா தலைமையில் 11 மணிக்கு மேல் இந்த கூட்டம் தொடங்குகிறது.
இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில்… ஒரு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுப்பதற்காக தான் இன்றைய கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
அந்த ஒரு தொகுதி திருச்சி என்றும் அதில் மதிமுகவின் முதன்மைச் செயலாளரான துரை வைகோ தான் போட்டிடுவார் என்றும் மதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் இதை கட்சியின் ஜனநாயக ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் வைகோ இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார் என்றும் தாயகத்திலிருந்து மதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
தேர்தல் அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்று துரை வைகோ தெரிவித்திருந்த நிலையில்… மதிமுக வின் நிர்வாகிகள் பலர் கடந்த சில நாட்களாக சமூகத் தளங்களில் துரை வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
இன்றைய கூட்டத்திலும் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் துரை வைகோவை அந்த ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் மீண்டும் ஆட்சி மன்ற குழு கூட்டம் பிற்பகல் கூடி துரை வைகோவை மதிமுக வேட்பாளராக அறிவிக்கும் என்று தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– வேந்தன்
எலெக்சன் ஃப்ளாஷ்: மோடியின் ரோடு ஷோ! பதட்டத்தைத் தவிர்த்த காவல்துறை
பொன்முடி விவகாரம் : ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
