பொன்முடி விவகாரம் : ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

Published On:

| By christopher

பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று (மார்ச் 18) வழக்கு தொடர்ந்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கில் பொன்முடி குற்றவாளி என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அதனால் அவர் மீண்டும் எம்எல்ஏ ஆனார்.

அதனைத்தொடர்ந்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால், “உச்ச நீதிமன்றம் பொன்முடி மீதான தண்டனையைத்தான் மட்டும் தான் நிறுத்தி வைத்துள்ளது. அவர் குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளிக்கவில்லை. எனவே பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது” என்று முதல்வருக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்  இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். சட்டப்படி அதனை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார். தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை

WPL 2024: எல்லிஸ் பெர்ரி டூ ஸ்ரேயங்கா பாட்டீல்… யாருக்கு எந்த விருது? எவ்வளவு பரிசுத்தொகை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share