இன்று மாலை 5:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையம் வந்தடைகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட இருப்பதால், அவருக்கான பிரச்சாரத்திற்காக கோவையில் மோடியின் ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் பாஜகவினர்.
இந்த ரோடு ஷோவானது 3400 மீட்டர் தூரத்திற்கு பாஜகவால் திட்டமிடப்பட்டிருந்தது. கோவையின் எரிக் கம்பெனி ஜங்ஷனில் துவங்கி ஊட்டி பேருந்து நிறுத்தம் வழியாக சாய்பாபா காலனி ஏ.ஆர்.சி ஜங்ஷனைக் கடந்து ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிஸ் வரை இந்த ரோடு ஷோவை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
ஊட்டி பேருந்து நிலையம் அருகில் பெரிய மசூதி ஒன்று உள்ளதால், மோடியின் ரோடு ஷோ இந்த வழியே செல்லும்போது இரு மதத்தினர் மத்தியில் கசப்பான சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, பாதுகாப்பு கருதியும் சட்ட ஒழுங்கு நலன் கருதியும் காவல்துறை உயர் அதிகாரிகளால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் குறைக்கப்பட்டு 2800 மீட்டராக இந்த ரோடு ஷோ சுருக்கப்பட்டுள்ளது. மசூதியைத் தாண்டி ரோடு ஷோ ஆரம்பிக்கும் வகையில் இந்த தூரக் குறைப்பு நடந்துள்ளது.
சாய்பாபா நகர் ஏ.ஆர்.சி ஜங்ஷனில் இருந்து துவங்கி ஆர்.எஸ்.புரம் போஸ்ட் ஆபிசில் இந்த ரோடு ஷோ முடிவடைகிறது. இதன் காரணமாக பெரும் பதட்டம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: அவசர மாவட்ட செயலாளர் கூட்டம்..அதிமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பாமக குழு
பொன்முடிக்கு மறுப்பு… ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய திமுக எம்பி கோரிக்கை!