வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திமுக பொதுச்செயலாளரின் மகன் கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம், அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் வேலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவை தேர்தல் ஆணையம் நேற்று ஜூன் 4ஆம் தேதி அறிவித்தது.
இதில் கதிர் ஆனந்த் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 5,68,692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஏசி.சண்முகம் 3,52,990 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார், அதிமுக வேட்பாளர் பசுபதி 1,17,682 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி மகேஷ் ஆனந்த் 53,284 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.
2019 தேர்தலிலும் கதிர் ஆனந்த் ஏசி சண்முகத்தை 8,141 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில், இந்த முறை இரண்டு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்நிலையில் கதிர் ஆனந்த் வெற்றியை வேலூர் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…