எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வேலைவாய்ப்பு
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (LIC Housing Finance Limited) (LIC HFL) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 180 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஏப்ரல் 30, 2026 ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
LIC HFL கல்வித் தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு, பொதுவாக குறைந்தபட்ச மதிப்பெண் (சுமார் 60%) தேவைப்படலாம்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 28 வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் மாத சம்பளம் சுமார் 32,000 ரூபாய் முதல் 35,200 ரூபாய் வரை, நகரம் (City Category) அடிப்படையில் மாறுபடும்.
மேலும் PF, மருத்துவம், இன்சூரன்ஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும்.
வேலை பொறுப்பு
ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியில் அலுவலக நிர்வாக உதவி, தரவு உள்ளீடு (Data entry), வாடிக்கையாளர் சேவை ஆதரவு போன்ற பொறுப்புகள் இருக்கும்.
இந்த வேலைவாய்ப்பு LIC போன்று பெரிய குழும நிறுவனத்தில் பணிபுரிய நல்ல வாய்ப்பு. நிலையான சம்பளம் மற்றும் சலுகைகள், வங்கி மற்றும் நிதி துறையில் வளர்ச்சி வாய்ப்பு என்பதால் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
180 காலியிடங்களுடன் வெளியாகியுள்ள LIC HFL ஜூனியர் அசிஸ்டெண்ட் வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாகும். குறிப்பாக ஏப்ரல் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டியதால், தகுதியானவர்கள் உடனடியாக பதிவு செய்வது அவசியமாகும்.
