கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த தொல்லியல் துறை சான்றுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்வகணபதி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் அளித்த பதில்: தமிழ்நாட்டில் உள்ள கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த வரைவு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளது.
2018-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த இறுதி அறிக்கை இதுவரை பெறப்படவில்லை.
பல்வேறு கலாச்சாரங்கள் குறித்து தமிழக தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் (2025 ஆகஸ்ட் வரை) மேற்கொண்ட 45 அகழ்வாராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தொல்லியல் ஆய்வு அலுவலர்களின் பணியிட மாற்றங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அமைச்சர், வழக்கமான நிர்வாக நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொல்லியல் ஆய்வு அலுவலர்களிடம் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி தளங்கள் தொடர்பான சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் மாநில தொல்லியல் துறை மற்றும் இதர நிறுவனங்கள் / முகமைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
