நிர்மலா சீதாராமனை சந்தித்த கனிமொழி 

Published On:

| By Kavi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. கனிமொழி இன்று (ஆகஸ்ட் 6) சந்தித்து பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் கூட இடம்பெறாத நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதில் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பல்வேறு விமர்சனங்களை கனிமொழி முன்வைத்து வருகிறார்.

கடந்த வாரம் தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி, தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கிற ஆட்சியாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தூத்துக்குடிக்கு வெள்ள நிவாரண நிதி தராதது, வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காதது ஆகியவை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசே ஒரு பேரிடர் தான் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கனிமொழி சந்தித்து பேசினார்.

அப்போது தமிழகத்தின் பிரச்சினை தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். தமிழ்நாடு மற்றும் எனது தொகுதியான தூத்துக்குடி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவரிடம் விவாதித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

5 மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்!

சினிமாவை விட்டு விலகுகிறேனா? – ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லிஞ்ச் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share