கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மதுபோதையில் தனது வாகனத்தின் மீது மோதியதாகவும், தட்டிக்கேட்ட தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இளைஞர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய புரோட்டா மாஸ்டர் சுரேஷ், “எம்.எல்.ஏ அருள் விக்கேஷ் மதுபோதையில் என் வண்டி மீது இடித்துவிட்டார். ஏன் இடித்தீர்கள் எனக் கேட்டதற்குத் தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார். இதனால் எனது வண்டி கடுமையாகச் சேதமடைந்தது.
தனது புல்லட்டால் எம்.எல்.ஏ வண்டி மீது இடித்ததைக் கேள்வி கேட்டதற்கு, ‘அப்படித்தான் செய்வேன்; உனது வேலையைப் பார்த்துக் கொண்டு போ’ என்று எம்.எல்.ஏ சொன்னார். ஹோட்டலுக்குச் சாப்பிட வந்தவர்கள் யாரோ வண்டியை நிறுத்திவிட்டார்கள். நான் புரோட்டாதான் வீசிக்கொண்டிருந்தேன். அப்போது, ‘நீ பார்க்க மாட்டாயா?’ என்று தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அப்போது, ‘எதுவாக இருந்தாலும் ஓனரிடம் பேசுங்கள்’ என்று சொன்னதற்கு, ‘நீ பார்க்க மாட்டாயா? நான் எம்.எல்.ஏ’ என்று திட்டினார். எனக்குத் தெரிந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க, தி.மு.க செய்ததைத்தான் த.வெ.க-வினரும் தொடர்ந்து செய்கிறார்கள்” என்றார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி எம்எஎல்ஏ பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அவர் மீது மது போதையில் வண்டியை இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.









