TIMELINE: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை நீங்குமா? நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. மே 10 முதல் நடந்தது என்ன?

By Mathi

|

Published on 26 Nov 2026, 8:07 PM

By Elections- High Court Timleline

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு உள்ளிட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 27-ந் தேதி) தீர்ப்பளிக்க உள்ளது.

இதனிடையே கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவால் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தின் நாளைய தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது முதல் 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, இடைத்தேர்தலுக்குத் தடை, நீதிமன்ற விசாரணைகள் வரை நடந்தது என்ன? முழுமையான காலவரிசை இதோ:

ADVERTISEMENT

மே 10: திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.

மே 13: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ADVERTISEMENT

மே 14: 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்தது.

மே 25: மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

மே 26: அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.

மே 27–28: விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 21 பேருக்கு அதிமுக மன்னிப்பு வழங்கியது. தவெகவில் இணைந்த 4 பேருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை.

ஜூன் 15: 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜூன் 16: விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார்.

ஜூன் 17: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

ஜூன் 29: கரூர் அதிமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார்.

ஜூலை 2: சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைந்தனர்.

ஜூலை 10: வழக்கறிஞர் வெங்கடாசலபதி தொடர்ந்த பொதுநல வழக்கில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஆகஸ்ட் 24: தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 28: 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் துணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 8: பெருந்துறை தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தடையை நீக்க ஜெயக்குமார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை செப்டம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டது.

செப்டம்பர் 28: மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதியை நீண்டகாலம் காலியாக வைத்திருப்பது பொதுநலனுக்கு எதிரானது என விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

அக்டோபர் 1: இடைத்தேர்தல் தடை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அக்டோபர் 6: நீதிமன்றத் தடை இல்லாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அக்டோபர் 13: 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் முடிவெடுக்கவும் உத்தரவிட்டது.

நவம்பர் 19: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார். தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.

நவம்பர் 22: கொளத்தூர் சட்டசபை தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்தது.

நவம்பர் 27: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel