ஏஐடியுசி அகில இந்திய தலைவராக தமிழகத்தின் கே.சுப்பராயன் எம்.பி. தேர்வு!

By Mathi

|

Published on 26 Nov 2026, 9:55 PM

ஏஐடியுசி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (AITUC) தேசிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏஐடியுசியின் 43-வது தேசிய மாநாடு நவம்பர் 22-ந் தேதி முதல் இன்று (நவம்பர் 26-ந் தேதி) வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் ஏஐடியுசியின் தேசிய தலைவராக கே.சுப்பராயனும், பொதுச்செயலாளராக அமர்ஜீத் கவுரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIBEA) பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், ஏஐடியுசியின் தேசிய துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

106 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கம்

இந்தியாவின் மிகப் பழமையான தேசிய தொழிற்சங்க அமைப்புகளில் ஒன்றான ஏஐடியுசி 1920-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி மும்பையில் தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக லாலா லஜபதி ராய் பதவி வகித்தார். ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்களும் ஏஐடியுசியின் தலைவர்களாகப் பதவி வகித்துள்ளனர்.

106 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தத் தொழிற்சங்க அமைப்பின் தேசிய தலைவராக தற்போது தமிழகத்தின் கே.சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏஐடியுசி தேசிய மாநாட்டில் இன்று அரசியலமைப்பு தினத்தையொட்டி நாடு முழுவதுமிருந்து பங்கேற்ற சுமார் 1,400 பிரதிநிதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க உறுதிமொழியேற்றனர்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம், கூட்டாட்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்கவும், நீதித்துறையின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் உறுதியேற்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel