டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஏன் பார்க்கவில்லை என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மேலும், 2வது முறையாக டி20 உலகக்கோப்பை பட்டத்தையும் இந்திய அணி கைப்பற்றியது.
இதற்காக இந்திய அணியை பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி, பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நான் ஏன் பார்க்கவில்லை என்பதற்கு நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, “டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நான் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்பதால்தான் நான் போட்டியை பார்க்கவில்லை.
இறுதிப்போட்டியில் இந்திய அணி வென்றதை அறிந்து எனக்கு கண்ணீர் வருகிறது” என அமிதாப் பச்சன் விளக்கம் கூறினார்.
தொலைக்காட்சியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஆட்டத்தை அமிதாப் பச்சன் பார்த்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிடும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதன் காரணமாக ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க வேண்டாம் என்று அமிதாப் பச்சனிடம் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்த கோரிக்கையை ஏற்று அமிதாப் பச்சன் இறுதிப்போட்டியை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார் : எடப்பாடி இரங்கல்!
”என் கடைசி மூச்சு உள்ளவரை மறக்கமாட்டேன்”: இந்திய வீரர் குறித்து இர்பான் நெகிழ்ச்சி!