இந்திய காபியின் ஏற்றுமதி 55% அதிகரிப்பு: என்ன காரணம்?

Published On:

| By christopher

பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் காபி ஏற்றுமதி 55 சதவீதவீம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ. 7,771.88 கோடி மதிப்புடைய காபி, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் காபி ஏற்றுமதி ரூ. 4,956-ஆக மட்டுமே இருந்தது. இந்த நிதியாண்டில் இது 55 சதவீதவீம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் காபிக்கு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதும், அதன் விளைவாக ஏற்றுமதி அதிகரித்துள்ளதும் விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய காபி ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் அதிகபட்சமாக 20% இத்தாலி பயன்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து ஜெர்மனி, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக, இந்திய ஏற்றுமதியில் 45% காபியை பயன்படுத்துகிறது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2.2 லட்சம் டன் மதிப்புடைய காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகமாகும். கடந்த ஆண்டு 1.91 லட்சம் டன் காபி மட்டுமே ஏற்றுமதியானது. ஐரோப்பிய ஏற்றுமதி விதிமுறைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்திய காபி தூள் விலை கிலோவுக்கு ரூ.352 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.259-ஆக இருந்தது.

2023 – 2024-ம் ஆண்டில் இந்தியாவில் 3.6 லட்சம் மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காபியில் 70% கர்நாடகத்திலிருந்து கிடைக்கிறது. நாட்டின் காபி உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளத்தில் 20% கிடைக்கிறது. தமிழ்நாடு 5.7% உற்பத்தியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: மழையால் ஏற்படும் சேற்றுப்புண்… வராமல் தடுப்பது எப்படி?

டாப் 10 நியூஸ் : 53ஆம் ஆண்டில் அதிமுக முதல் பணிக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள் வரை!

கிச்சன் கீர்த்தனா : மூங்கில் அரிசி வேர்க்கடலை லட்டு

’வேட்டையன்’ : ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது!

குடிமகன்கள் பரிதாபம்: அப்டேட் குமாரு

கனமழை : கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share