இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயிக்கிட்டு இருந்தேன்.
ஃபிரெண்டு ஒருத்தன் அவசரம் அவசரமா ரோட்டுல நடந்து போயிக்கிட்டு இருந்தான். அவன மறிச்சு, “எங்கடா போயிக்கிட்டு இருக்க. ரெண்டு பேண்ட் பாக்கெட்டுலையும் என்ன வச்சிருக்கன்னு” கேட்டேன்.
“மாப்ள உனக்கு சேதி தெரியாதா. நாளையில இருந்து அடைமழை வெளுக்க போகுதாம். அதான் பால் பாக்கெட் வாங்கிட்டு வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“என்னடா சொல்ற”
“ஆமா மாப்ள… போய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா பால் பாக்கெட்டு, பிரெட், பிஸ்கட், காய்கறி எல்லாம் வாங்கி வச்சிக்கன்னு” சொன்னான்.
“அடேய்… எல்லோரும் அதை வாங்கி வைங்க, இதை வாங்கி வைங்கன்னு அட்வைஸ் பண்ணுறீங்களே… எவனாச்சும் சரக்கு வாங்கி வைங்கன்னு சொல்றீங்களாடான்னு” அவன்கிட்ட கேட்டேன்.
டென்ஷனாகி கிளம்பிட்டான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.
balebalu
மழை வர போகுது ன்னு பத்திரமா எடுத்து வெச்சாச்சு மாமா
மாடில காய போட்ட துணியா மாப்ள
அது இல்ல காரை பத்திரமா மேம்பாலத்துல பார்க் பண்ணியாச்சு ன்னு சொல்றேன் மாமா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வயிறு நிறைய சாப்பிட்டும் அரை மணி நேரத்துலயே பசிச்சா..
நல்ல ஜீரண சக்தி இருக்கு, உடம்பு ஆரோக்யமா இருக்குன்னு அர்த்தமா புரோ..?
அதான் இல்ல, நீ ஒரு சரியான தீனி பண்டாரம்னு அர்த்தம்..
எதிரிக்கு கூட இந்த நிலைமை வர கூடாது, டேய் பரமா படிடா 🤒 pic.twitter.com/5Xg2b4I2Ac
— Jai Bheem (@JaaiBheem) October 12, 2024
ச ப் பா ணி
புதுப்படம் பார்ப்பவர்கள் இருவகை
*தியேட்டரில் பார்ப்பவர்கள்
*தியேட்டர் பிரிண்டில் பார்ப்பவர்கள்
Sasikumar J
நார்மலாவே திங்கட்கிழமை ஆபீஸ்க்கு போறதுக்கு மனசு வராது அதுல ஆரஞ்சு, ரெட் அலர்ட் வேற எப்படி ஆபீஸ் போறது…!
Mannar & company™🕗
‘துணிகள்’ உற்பத்தி விலைக்கே கிடைக்கும்னு சொல்றவனையும் நம்பாத,
‘பட்டாசுகள்’ சிவகாசி விலைக்கே கிடைக்கும்னு சொல்றவனையும் நம்பாத!
ரஹீம் கஸ்ஸாலி
மழை, வெள்ளக் காலங்களில் மேம்பாலங்கள் என்பவை அறிவிக்கப்படாத கார் பார்க்கிங் ஏரியாவாக மாறிவிடுகிறது.
ச ப் பா ணி
மழையை எதிர்பார்த்து காத்திருப்பது.. விவசாயிகள் மட்டுமல்ல
மாணவ மாணவியரும் தான்
mohanram.ko
மழைத் தண்ணி வராத இடத்துல வீடு கட்டணும்…
எங்கே ணே கட்டணும்?
மேம்பாலத்து மேலே தான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
கோவை, சேலம், மதுரையில் வெளுத்து வாங்கும் மழை!
சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள்… மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு!