கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published On:

| By Mathi

school leave

கனமழை காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 10 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் இடியுடன் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி செங்கல்பட்டு, சென்னை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும் அரியலூர், கோவை, தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை இடியுடன் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விடுமுறை அறிவிப்பு

இந்த நிலையில், கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகூடங்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் லீவ் இல்லை

இதனிடையே காஞ்சிபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share