”ஓட்டு திருடன் ஞானேஷ் குமார்” : சென்னையில் போராடிய மாணவர்கள் இரவில் கைது!

Published On:

| By Kavi

சென்னையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடிய மாணவர்களை இரவில் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை எழும்பூரில்  ஜந்தர் மந்தர் 2.0 என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் திரண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  24  மணி நேர போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி,  ’ஓட்டு திருடன் ஞானேஷ் குமாரை பதவியை விட்டு நீக்கு’ என்று வலியுறுத்தினர். 

ADVERTISEMENT

இதற்கிடையே போராட்ட களத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அரசு பேருந்துகளும் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்தநிலையில் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். 

ADVERTISEMENT

எனினும் அவர்கள் கலைந்து செல்லாததால், கைது செய்து அழைத்துச் சென்றனர். 

அப்போது மாணவர்கள், 24 மணி நேர தொடர் போராட்டம் என்பது காவல்துறை அடைத்து வைக்கும் மண்டபத்தில் தொடரும். ஓட்டு திருடனை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கோஷம் எழுப்பினர். 

ADVERTISEMENT

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள்,  ”தவெக அரசு எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக ஒரு நிலை எடுக்கிறது.  ஆனால் மாணவர்களும், இளைஞர்களும் போராடும்போது காவல்துறையை வைத்து அடக்குமுறையில் ஈடுபடுகிறது. எனவே இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வி எழுகிறது. 

பாஜகவுக்கு எதிராக இருக்கிறோம். நீட், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்று ஓட்டுகளை வாங்கிவிட்டு, இப்போது அடக்குமுறையில் ஈடுபடுவது நியாயமில்லை” என்று கூறினர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share