தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை… 2027 லீவ் லிஸ்ட்!

Published On:

| By Kavi

2027-ம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

பொதுமக்களின் திட்டமிடல்கள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே வகுத்துக் கொள்ள வசதியாக, 2027 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும்.

ADVERTISEMENT

அந்தவகையில் விடுமுறை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி ஞாயிறு அன்று தீபாவளி வருகிறது. ஞாயிறு அன்று பண்டிகை நாள் வருவதால் கூடுதல் விடுமுறை கிடைக்காது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

அதுவே அடுத்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி  தீபாவளி பண்டிகை வருகிறது. 

வியாழன் அன்று பண்டிகை வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுமுறை எடுத்தால் அடுத்தது, சனி, ஞாயிறு  என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை  கணக்காகும். அதனால் 2027 தீபாவளி சூப்பர் தீபாவளி என இப்போதே பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT

விடுமுறை பட்டியல்

ஆங்கிலப் புத்தாண்டு – 01.01.2027 – வெள்ளிக்கிழமை
பொங்கல் – 15.01.2027 – வெள்ளிக்கிழமை
திருவள்ளுவர் நாள் – 16.01.2027 – சனிக்கிழமை
உழவர் திருநாள் – 17.01.2027 – ஞாயிற்றுக்கிழமை
தைப்பூசம் – 22.01.2027 – வெள்ளிக்கிழமை
குடியரசு நாள் – 26.01.2027 – செவ்வாய்க்கிழமை
ரம்ஜான் – 10.03.2027 – புதன்கிழமை
புனித வெள்ளி – 26.03.2027 – வெள்ளிக்கிழமை
வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) – 01.04.2027 – வியாழக்கிழமை
தெலுங்கு வருடப் பிறப்பு – 07.04.2027 – புதன்கிழமை
தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் – 14.04.2027 – புதன்கிழமை
மகாவீரர் ஜெயந்தி – 19.04.2027 – திங்கட்கிழமை
மே நாள் – 01.05.2027 – சனிக்கிழமை
பக்ரீத் – 17.05.2027 – திங்கட்கிழமை
மொகரம் – 15.06.2027 – செவ்வாய்க்கிழமை
சுதந்திர நாள் – 15.08.2027 – ஞாயிற்றுக்கிழமை
மிலாதுன் நபி – 15.08.2027 – ஞாயிற்றுக்கிழமை
கிருஷ்ண ஜெயந்தி – 25.08.2027 – புதன்கிழமை
விநாயகர் சதுர்த்தி – 04.09.2027 – சனிக் கிழமை
காந்தி ஜெயந்தி – 02.10.2027 – சனிக் கிழமை
ஆயுத பூஜை – 08.10.2027 – வெள்ளிக்கிழமை
விஜயதசமி – 09.10.2027 – சனிக்கிழமை
தீபாவளி – 28.10.2027 – வியாழக்கிழமை
கிறிஸ்துமஸ் – 25.12.2027 – சனிக்கிழமை

தமிழ்நாட்டிலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே வ. எண் 9-ல் குறிப்பிடப்பட்ட விடுமுறை பொருந்தும்.

மொத்தம் 25 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் 6 விடுமுறை சனிக்கிழமையிலும், 2 விடுமுறை ஞாயிற்றுக்கிழமையிலும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share