கோவை மாணவன் அகிலன் தற்கொலை: ஆசிரியர் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவையில் பள்ளி மாணவரை, சக மாணவர்கள் சாதி ரீதியாக கேலி மற்றும் கிண்டல் செய்த சம்பவத்தில், 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையின் பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த 11-ஆம் வகுப்பு மாணவன் அகிலன், நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிற்பகலில் அகிலனின் தாயார் கௌசல்யா வீட்டுக்கு வந்த போது மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவம் குறித்து கௌசல்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ADVERTISEMENT

புகாரில் தனது மகன் தற்கொலைக்கு அகிலனுடன் படித்த சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் ஆசிரியர்கள், மாணவர்கள் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வகுப்பறையில் மாட்டு இறைச்சி சாப்பிடுவது குறித்து ஆசிரியர் விஜயகுமார் கேட்ட நிலையில், அதன்பிறகு சக மாணவர்கள் இருவர் அகிலனைச் சாதிப் பெயர் சொல்லித் திட்டித் தாக்கியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பாக இன்று ஆசிரியர் விஜயகுமாரை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share