53ஆம் ஆண்டில் அதிமுக!
தமிழ்நாட்டில் மூத்த அரசியல் கட்சியாக விளங்கும் அதிமுக இன்று (அக்டோபர் 17) 53 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்!
ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
13 மாவட்டங்களில் மழை!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அம்மா உணவகங்களில் இலவச உணவு!
சென்னையில் இன்று அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பணிக்கு திரும்பும் சாம்சங் ஊழியர்கள்!
தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதையடுத்து, சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளனர் என்று சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நயாப் சிங் சைனி பதவியேற்பு!
ஹரியானா முதல்வராக பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில்,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயக்கம்!
சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் வார நாள் அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Bajaj Pulsar N125 அறிமுகம்!
இந்திய சந்தையில் பல்சர் N125 என்ற புதிய பைக்கை பஜாஜ் ஆட்டோ நாளை அறிமுகம் செய்கிறது.
’Revolver Rita’ பட டீஸர் ரிலீஸ்!
நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை ஒட்டி, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘Revolver Rita’ படத்தின் டீஸர் இன்று வெளியாகிறது.
அனில் கும்பிளே பிறந்தநாள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த லெக் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே பிறந்தநாள் இன்று.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மூங்கில் அரிசி வேர்க்கடலை லட்டு
கடலூர்: ஆசிட் குடித்த ஆயுதப்படை போலீஸ்… மருத்துவமனையில் அட்மிட்!