தனது தோழியுடன் இன்பநிதி இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம்’ என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி அமைச்சரான போது வாரிசு அரசியல் என்று விமர்சனம் எழுந்தது. அடுத்தது இன்பநிதியும் அமைச்சராகலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இதுதொடர்பாக பேசி வந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,
”உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க என்று சொல்லுவோம். வாரிசு அரசியல் என்று கூறியெல்லாம் எங்களை மிரட்டிவிட முடியாது” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முதல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் என சமூக வலைதளங்களில் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தைக் கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது.
பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்?.’அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை’ என்று விமர்சித்திருக்கிறார்.

இந்தசூழலில் இன்பநிதியின் தாயான கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையின் முழு மகிமையையும் புரிந்துகொள்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக அரசியல் குறித்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்காமல் தனது இயக்குநர் பாதையில் கடந்துபோகும் கிருத்திகா உதயநிதி தன் மகன் மீது விமர்சனம் எழுந்திருக்கும் இந்தச்சூழலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இன்பநிதி தனது தோழியுடன் சாதாரணமாக இருக்கும் புகைப்படத்தை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அது தற்போது வைரலாகி விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் இன்பநிதியின் இன்ஸ்டாகிராம் பக்கம் டீஆக்ட்டிவேட் செய்யப்பட்டுள்ளது.
பிரியா
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட தாத்தா: பளார் என விட்ட பாட்டி!